ரோலக்ஸால் ஏற்பட்ட துயரம்: சுத்தியல் குழுவின் அட்டூழியம்
பிரிட்டனில் ரோலக்ஸ் கடிகாரத்திற்காக சுத்தியல் குழு திருடர்கள் கொடூரமாக தாக்கியதில் ஒருவர் பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.
பர்மிங்காம் பகுதியை சேர்ந்த டேரன் ஸ்மித் என்பவரே நேற்று உள்ளூர் நேரப்படி மதியத்திற்கு மேல் 3 மணியளவில் சுத்தியல் குழுவால் தாக்குதலுக்கு இலக்காமவர்.
அவசர மருத்துவ உதவிக்குழுவினர் தங்களால் இயன்ற முயற்சிகளை முன்னெடுத்தும் உயிரை காப்பாற்ற முடியவில்லை என கூறியுள்ளனர். பழகுவதற்கு இனிமையான நபர் என அவரது நண்பர்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவு செய்துள்ளனர்.
50 வயது கடந்த டேரன் ஸ்மித் சுத்தியல் குழுவால் கொடூரமாக தாக்கப்பட்டது, அவரது ரோலக்ஸ் கடிகாரத்திற்காக என நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
சம்பவத்தின் போது அப்பகுதியில் சிறார்கள் பலர் காணப்பட்டுள்ளனர். பொலிஸ் ஹெலிகொப்டர் வட்டமிட்டதாகவும், இந்த நிலையில் தான் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.