நடுவானில் பயணி ஒருவரின் கொலை மிரட்டல்: அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்
நடுவானில் பயணி ஒருவர் கூரான ஆயுதம் மூலம் விமானத்தில் இருந்த அனைவரையும் அச்சுறுத்தத் தொடங்கிய நிலையில், குறித்த விமானமானது அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
ஃபிரான்டியர் ஏர்லைன்ஸ் விமானத்திலேயே சனிக்கிழமை குறித்த சம்பவம் நடந்துள்ளது. பயணி ஒருவர் விமான ஊழியர்களை கத்தியால் குத்துவதாக மிரட்டத் தொடங்கியுள்ளார்.
இதனையடுத்து, சின்சினாட்டி பகுதியில் இருந்து தம்பாடோ வரை செல்லும் விமானமானது இடையே அட்லாண்டாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மிரட்டல் விடுத்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். இந்த களேபரத்தில் எவரும் காயம்படவில்லை என்றே விமான ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அந்த நபர் ஏன் மிரட்டல் விடுத்தார், எதனால் அவர் அவ்வாறு கொலை மிரட்டல் விடுத்தார் என்பது தொடர்பான தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
மட்டுமின்றி, கூரான ஆயுதத்தை அவர் எப்படி விமானத்திற்குள் எடுத்துச் சென்றார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.