பிரித்தானியாவில் அறுவை சிகிச்சைக்கு சென்றவர் நான்கு சிறுநீரகத்துடன் விழித்தெழுந்தார்!
பிரித்தானியாவில் கிட்னி அறுவை சிகிச்சைக்கு சென்றவர் நான்கு சிறுநீரகத்துடன் விழிந்தெழுந்த ஆச்சர்ய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
ஸ்டுவர்ட் மிடில்டன் (Stuart Middleton) என்பவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்த நிலையில் அவருக்கு சிறுநீரக அறுவை சிகிச்சைமூலம் புதிய இரண்டு சிறுநீரகம் பொருத்தப்பட்டது.
எனினும் 46 வயதானவர் தான் அறுவை சிகிர்சைக்கு செல்லும் பொழுது தனது இரண்டு சிறுநீரகமும் நீக்கப்பட்டு புதிய சிறுநீரகம் பொருத்தப்படும் என்று நம்பியிருந்தார்.
ஆனால் அவரது பழைய சிறுநீரகம் நீக்கப்படாமல் புதிய சிறுநீரகம் பொருத்தப்பட்டது அறிந்து திகைத்துப் போனார். இந்நிலையில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஸ்டுவர்ட் மிடில்டன் (Stuart Middleton) எது எப்படி இருப்பினும் உயிர்வாழ்வதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தெரிவித்தார்.
அதேவேளை கிட்னி ரிசேர்ச் யூகே தெரிவிக்கையில் இவ்வாறு அறுவை சிகிச்சை நடைபெறும் பொழுது பழைய சிறுநீரத்தை அப்படியே விடுவது வளமை என்று தெரிவித்துள்ளது.
