டொனால்ட் ட்ரம்புக்கும் ஜோர்தான் மன்னர் இடையே சந்திப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு ஜோர்தான் மன்னர் அப்துல்லாவுக்கும் இடையில் வெள்ளை மாளிகையில் இன்றைய தினம் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காசாவைக் கைப்பற்றி பாலஸ்தீனர்களை மீள்குடியேற்றம் செய்யும் தமது திட்டத்துக்கு ஆதரவளிக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி மேற்கொண்ட அழைப்பை ஜோர்தான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் நிராகரித்துள்ளன.
இதனையடுத்து, தமது திட்டத்துக்கு ஒத்துழைக்கவில்லையாயின் அந்த நாடுகளுக்கான உதவியை நிறுத்த நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில், ஜோர்தான் மன்னர் அவரை சந்திக்கவுள்ளார்.
இந்த சந்திப்புக்கு முன்னதாக ஜோர்தான் மன்னர் அப்துல்லா, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆலோசகர்கள் சிலரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
குறிப்பாகத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மைக் வோல் உடன் மன்னர் அப்துல்லா முக்கிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.