நடுவானில் நிகழ்ந்த அசம்பாவிதம்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பாராசூட் வீரர்!
நடுவானில் திடீரென கிழிந்த பாராசூட்டால் மலை உச்சியில் இருந்து கீழே குதித்த வீரர் ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின் மீண்டு வந்துள்ள சம்பவம் பெரும் அச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜானி டி ஜூலியஸ் என்பவர் தன்னை மல்யுத்த வீரர் மற்றும் பாராசூட் வீரர் என அடையாளப்படுத்தி கொண்டவர்.
30 பேர் கொண்ட குழுவுடன் சேர்ந்து பாராசூட்டில் இருந்து குதிக்கும் சாகச நிகழ்வை செய்து காட்ட சென்றுள்ளார். அனைவரும் பாராசூட்டை விரித்து பறந்து விட, இவர் கடைசி ஆளாக குதித்துள்ளார்.
அதனை காணொளியாக பதிவும் செய்துள்ளார். ஆனால், ஒரு சில வினாடிகளிலேயே இவரது பாராசூட் கிழிந்து விட்டது. இதனால், வானில் பறப்பதற்கு பதிலாக மளமளவென மலை உச்சியில் இருந்து கீழே போயுள்ளார். சமநிலையை அடைவதற்காக, ஓரிடத்தில் தன்னை நிலை நிறுத்துவதற்காக போராடியுள்ளார்.
காற்றின் வேகத்தில் சென்ற அவரது பாராசூட் மலையின் மற்றொரு உச்சியில் சென்று சிக்கி கொண்டது. இதனால், ஏறக்குறைய ஒரு மணிநேரம் வரை மலையில் தொங்கியபடி போராடியுள்ளார்.
கடைசியாக கீழே குதித்த இவரை கவனிக்க பின்னால் வேறு ஆட்களும் இல்லை. இதனால், அவரை மீட்பதிலும் சிக்கல் ஏற்பட்டது. இருப்பினும், அவருக்கு காயம் எதுவும் ஏற்படாதது ஆறுதல் அளித்துள்ளது.
இதன்பின்பு, ஒரு வழியாக போராடி மலை மீது ஏறி மீண்டு வந்துள்ளார். அதிபயங்கர சாகச நிகழ்வில் ஈடுபட்டு பார்ப்பவர்களை திகிலின் உச்சத்திற்கு கொண்டு சென்ற இந்த காணொளியை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட உள்ளார்.
1 லட்சத்திற்கும் மேற்பட்ட முறை காணொளி பார்க்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் லைக்கும் செய்துள்ளனர். விமர்சனங்களும் குவிந்து வருகின்றன.