ரஷ்யாவை அதிர வைத்த எறிகணை தாக்குதல்!
ரஷ்யாவில் அமைந்துள்ள இராணுவ தளம் மீது நடத்தப்பட்ட எறிகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தகவல்கள் வெளியகியுள்ளமை அந்நாட்டை அதிரவைத்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஒருமாதம் கடந்துள்ள நிலையில் ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைன் பெரும் இழப்புக்களை சந்தித்து வருகின்றது. ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல்கள் மற்றும் எறிகணை வீச்சுக்களால் உக்ரைன் தினசரி அதிர்ந்த வண்ணம் உள்ளது.
தொடரும் தாக்குதல்களினால் உக்ரைன் மக்கள் தொடர்ந்தும் பாதாள அறைகளில் அச்சத்துடன் தங்கியுள்ளனர்.
இந்த நிலையில் ரஷ்யாவில் அமைந்துள்ள இராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
உக்ரைனிலிருந்து 12 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள ரஷ்யாவின் பெல்கோரோட் பிராந்தியத்திற்கு அருகில் உள்ள Oktyabrsky என்ற கிராமத்தில் உள்ள இராணுவ முகாம் மீதே இந்த எறிகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் செய்தி நிறுவனமான TASS தெரிவித்துள்ளது.
மேலும் இந்த எறிகணை தாக்குதலை பெல்கோரோட் பிராந்தியத்தின் ஆளுநர் வியாசஸ்லாவ் கிளாட்கோவ் உறுதிப்படுத்தியுள்ளார்.