கனடாவில் காணாமல் போன 11 வயது சிறுமி தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!
கனடாவின் நோவாஸ் போட்டியாக பகுதியில் காணாமல் போன 11 வயது சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
நோவா ஸ்கோட்டியாவின் டிக்வே கவுன்டி பகுதியில் இந்த சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை இந்த சிறுமி காணவில்லை என தகவல் வெளியாகி இருந்தது.
நோவா ஸ்கோட்டியாவின் மவுன்ட் பிளசன்ட் பகுதியில் இந்த சிறுமி கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் வேளையில் காணாமல் போயிருந்தார்.
இந்த சிறுமி காணாமல் போன சம்பவம் சம்பவத்தை தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு இருந்தது.
நேற்றைய தினம் காணாமல் போன இந்த சிறுமி இன்று பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டனர்.
சமூக ஊடகங்களின் வாயிலாக பொதுமக்கள் குறித்த சிறுமியை தேடுவதற்கு வழங்கிய உதவி பாராட்டுக்குரியது எனவும் அவர்களுக்கு நன்றி பாராட்டுவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சிறுமி எவ்வாறு மீட்கப்பட்டார் இந்த சம்பவம் ஒரு கடத்தல போன்ற விவரங்களை போலீசார் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.