கனடாவின் குரங்கம்மை நிலவரம்
நாட்டில் குரங்கம்மை தொற்று குறைவடைந்து செல்வதாக கனேடிய பொதுச் சுகாதார முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக அளவில் குரங்கம்மை தொற்று உறுதியாளர் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து செல்லும் நிலையில், கனடாவிலும் இந்த நிலையை அவதானிக்க முடிகின்றது.
கடந்த ஆகஸ்ட் மாதம் கனடாவில் குரங்கம்மை தொற்றாளர்கள் அதிகளவில் பதிவாகி வந்த நிலையில், இந்த மாதம் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
எண்ணிக்கையானது சுமார் 80 வீதமான வீழ்ச்சியை பதிவாகியுள்ளது.
தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக இந்த நிலைமையை அவதானிக்க முடிவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சர்வதேச மற்றும் பிராந்திய அடிப்படையிலான நிர்வாகங்களுடன் அரசாங்கம் குரங்கம்மை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கனடாவில் இதுவரையில் 1444 குரங்கம்மை தொற்று உறுதியாளர்கள் பதிவாகியுள்ளனர்.