கிறிப்டோ மோசடியில் சிக்கிய கனடிய பெண்
கிறிப்டோ கரன்சி மோசடியில் சிக்கிய கனடிய பெண் ஒருவர் 25000 டொலர்களை இழந்துள்ளார்.
பிரபல வர்த்தகர் எலோன் மஸ்கினால் நிறுவப்பட்ட கிறிப்டோ கரன்சி மென்பொருள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
மொன்றியலைச் சேர்ந்த பெண்ணே இவ்வாறு மோசடியில் சிக்கியுள்ளார்.
இணைய வழியில் பல்வேறு மோசடிகள் இடம்பெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சட்ட ரீதியான முறையில் கிறிப்டோ கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவதாக குறித்த பெண் கருதியுள்ளார்.
சுமார் ஒரு மாத காலமாக கிறிப்டோ கொடுக்கல் வாஙல்களை மேற்கொண்டுள்ளார்.
புதிய கிறிப்டோ கரன்சி மோசடிகளினால் பலர் இவ்வாறு ஏமாற்றப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
25000 டொலர்களை முதலீடு செய்ததன் பின்னரே இந்த கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் தமக்கு சந்தேகம் எழுந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
மோசடியான அடிப்படையில் கணக்குகளை உருவாக்கப்பட்டு பணம் மோசடி செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.