எடோபிகோவில் மோட்டார்சைக்கிள் விபத்து: பெண் படுகாயம்
டொரண்டோவின் எடோபிகோ பகுதியில் காரும், மோட்டார்சைக்கிளும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில், ஒரு பெண் மோட்டார்சைக்கிள் ஓட்டுநர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த விபத்து புதன்கிழமை பிற்பகல் 4:45 மணியளவில், கிப்லிங் அவென்யூ மற்றும் எக்லிங்டன் அவென்யூ மேற்கு சந்திப்பில் இடம்பெற்றதாக டொரண்டோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் பெண் மோட்டார்சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் பலத்த காயங்களுடன், தீவிர சிகிச்சை மையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.
விபத்தில் ஈடுபட்ட மற்ற வாகனத்தின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே தங்கியிருந்தார் என்றும் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தற்போது இந்த விபத்துக்கான காரணம் வெளியிடப்படவில்லை. மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.