சுவிட்சர்லாந்தில் பனிப்பாறைச்சரிவில் சிக்கிய கனேடிய ராணுவ வீரர் மாயம்
சுவிட்சர்லாந்தில், பனிப்பாறைச்சரிவில் சிக்கி கனேடிய ராணுவ வீரர் ஒருவர் மாயமான நிலையில், அவர் உயிரிழந்திருக்கக்கூடும் என கனேடிய ராணுவம் தெரிவித்துள்ளது.
கனேடிய ராணுவ வீரரான Capt. Sean Thomas, விடுமுறைக்காக சுவிட்சர்லாந்து சென்றுள்ளார். இம்மாதம் 1ஆம் திகதி பனிப்பாறைச்சரிவொன்றில் சிக்கியுள்ளார் அவர்.
அன்றையதினம் பனிப்பாறைச்சரிவில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்ததாக சுவிஸ் அதிகாரிகள் தெரிவித்திருந்தார்கள்.
Capt Sean Thomas is missing and presumed dead after being caught in an avalanche in Switzerland while on leave from #OpIMPACT. https://t.co/8QR7j3hkFF pic.twitter.com/Lb7XoOaZQR
— Canadian Armed Forces (@CanadianForces) April 7, 2024
இந்நிலையில், கனேடிய ராணுவம் சமூக ஊடகமான எக்ஸில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், Capt. Sean Thomas சுவிட்சர்லாந்தில் பனிப்பாறைச்சரிவொன்றில் சிக்கி மாயமாகியுள்ளதாகவும், அவர் உயிரிழந்திருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், Capt. Sean Thomasஉடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், சக வீரர்களுக்கும், கனேடியர்களுடன் இணைந்து கனேடிய ராணுவமும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாகவும் கனேடிய ராணுவம் தெரிவித்துள்ளது.
Kantonspolizei Wallis/Keystone/The Associated Press