கனேடிய நகரம் ஒன்றில் வீட்டின் அருகே கிடைத்த அஸ்திக்கலசம்: உரிமையாளரைத் தேடும் பெண்
கனேடிய நகரம் ஒன்றில், பனி உருகியதைத் தொடர்ந்து, தன் வீட்டின் அருகே ஒரு பொருளைக் கண்டெடுத்தார் அந்த வீட்டில் வாழும் பெண். அது ஒரு அஸ்திக்கலசம்...
கனடாவின் தெற்கு ஒன்ராறியோவிலுள்ள Barrie நகரில் வாழ்பவர் Monique Bennett. பனி உருகியதைத் தொடர்ந்து அவரது வீட்டின் முன்னே ஒரு இடத்தில் ஒரு உலோகப் பாத்திரம் இருப்பதைக் கவனித்துள்ளார் அவர்.
CTV News/Alessandra Carneiro
அது என்ன என்று அதை எடுத்துப் பார்க்கும்போது, அது ஒரு அஸ்திக்கலசம் என்பது தெரியவந்துள்ளது Moniqueக்கு.
தனக்குப் பிரியமானவர்களைப் பிரிவதே கவலையை ஏற்படுத்தும் விடயம். அப்படியிருக்கும்போது, அவர்களுடைய நினைவாக வைத்திருக்கும் அஸ்திக்கலசம் காணாமல் போனால், அது அவர்களுக்கு எவ்வளவு கவலையை ஏற்படுத்தும் என்பதை தன்னால் உணர முடியும் என்று கூறும் Monique, தானும் தன் அன்பிற்குரியவர்களை இழந்தவர்தான் என்கிறார்.
CTV News/Alessandra Carneiro
ஆகவே, அந்த அஸ்திக்கலசத்துக்கு உரியவரின் உறவினர்களைத் தேடும் முயற்சியில் இறங்கியுள்ளார் Monique. முதலில் இறுதிச்சடங்கு மையம் ஒன்றை அணுகிய Monique, அந்த முயற்சி பலன் தராததால், தற்போது சமூக ஊடகம் வாயிலாக அந்த அஸ்திக்கலசத்தின் உரிமையாளரை தேடும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
CTV News/Alessandra Carneiro