தேசிய லொட்டரியில் 58 மில்லியன் டொலர் வென்றவர் உரிமை கோரியுள்ளார்
பிரிட்டனில் தேசிய லொட்டரியில் 58 மில்லியன் டொலர் வென்ற நபர் இறுதியில் தமக்கான தொகையை உரிமை கோரியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஜாக்பாட் தொகையான 174 மில்லியன் டொலரில் பிரிட்டன் நபருடன் பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்தை சேர்ந்த இருவரும் பரிசை பங்கிட உள்ளனர்.
பரிசை வென்ற பிரிட்டன் குடிமகன், தனியான ஒருவரா அல்லது ஒரு கூட்டமைப்பின் பிரதிநிதியா என்பதும் குறிப்பிடப்படவில்லை.
இந்த நிலையில், 58 மில்லியன் டொலர் பரிசு தொகையை உரிமை கோரியுள்ளது தங்களின் பாதி வேலை முடிந்ததற்கு நிகர் என நிர்வாகிகள் தரப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
இனி, பணத்தை அவர் வசம் ஒப்படைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க இருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
2022ல் யூரோமில்லியன் லொட்டரியில் மொத்தம் 6 பிரிட்டன் குடிமக்கள் 820 மில்லியன் பவுண்டுகள் வென்றிருந்தனர்.
ஆனால் 2023ல் பிரிட்டனில் வசிக்கும் ஒருவர் யூரோமில்லியன் லொட்டரியில் வெல்வது இதுவே முதல் முறை.