கனேடிய பிரதமரும் நேட்டோ பிரதானியும் அல்பர்ட்டா இராணுவ முகாமிற்கு விஜயம்
கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ (Justin Trudeau) மற்றும் நோட்டூ கூட்டுப் படைகளின் செயலாளர் நாயகம் ஜென்ஸ் ஸ்டோலன்பெர்க் (Jens Stoltenberg) ஆகியோர் அல்பர்ட்டா இராணுவ முகாமிற்கு விஜயம் செய்துள்ளனர்.
கனடாவிற்கு விஜயம் செய்துள்ள நேட்டோ செயலாளர் நாயகம் கனடாவின் முக்கிய இராணுவ நிலைகளுக்கு விஜயம் செய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விஜயத்தின் போது ஆர்டிக் பிராந்திய வலய பாதுகாப்பு குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
பின்லாந்து, சுவீடன் ஆகிய நாடுகளும் நேட்டோ கூட்டுப் படையில் அங்கத்துவம் பெற்றுக்கொண்டுள்ளன.
இதன்படி, ஆர்டிக் பிராந்திய வலயத்தில் நேட்டோ படையில் இணைந்து கொள்ளாத ஓரே நாடாக ரஸ்யா திகழ்கின்றது.
அல்பர்ட்டா இராணுவ முகாமிற்கான விஜயத்தின் பின்னர் கனேடிய பிரதமருடன் நேட்டோ செயலாளர் நாயகம் பேச்சுவார்த்தை நடாத்த உள்ளார்.