அமெரிக்காவுக்கு வந்துள்ள புதிய ஆபத்து!
அமெரிக்காவில் ஒமிக்ரோனின் துணை வைரசான பிஏ.2 ஆதிக்கம் செலுத்துகிறது என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது.
ஒமிக்ரோனை விட இந்த துணை வைரஸ் வேகமாக பரவுகிற தன்மையைக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக பிஏ.2 வைரஸ், அசல் பிஏ.1 வைரசை விட 30 சதவீதம் அதிகமாக பரவும் எனவும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் கடந்த ஒரு வார காலத்தில், அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 54.9 சதவீதத்தினர் பிஏ.2 வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஒரு வாரத்துக்கு முன்பாக பாதிக்கப்பட்டவர்கள் 39 சதவீதமாக இருந்த நிலையில் அதற்கு 2 வாரங்களுக்கு முன்பு 27.8 சதவீதமாக இருந்ததாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.