கொவிட்டுக்கு ஸ்பிரே வடிவில் புதிய மருந்து ; விரைவில் பயன்பாட்டுக்கு
கொவிட்டுக்கு எதிராக Nasal Spary என்ற பெயரில் புதிய மருந்து ஒன்றை அவுஸ்திரேலிய ஆராய்ச்சியாளரக்ள் பரிசீலித்து வருகின்றதாக கூறப்படுகின்றது.
இந்த மருந்தை ஒருவரின் மூக்கில் ஸ்பிரே பண்ணும் போது அவர்களுக்கு கொவிட் தொற்று இருந்தால் அதிலிருந்து பாதுகாக்கிறது என பேராசிரியர் காம்பெல் தெரிவித்துள்ளார்.
அதோடு இது மிகவும் மலிவானது என கூறப்படும் அதேவேளை, இந்த பரிசோதனைகள் 2022 நடுப்பகுதி வரை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த பரிசோதனைகள் வெற்றியளித்தால் கொவிட்டுக்கு எதிராக ஊசி மருந்தாகவோ வேறு வகையிலோ இதை பயன்படுத்தப்படலாம். அதோடு கொவிட் தொற்றின் ஆரம்பகட்டத்தில் இந்த மருந்து தொற்று பரவாமலிருக்க மாஸ்க்காகவும் பயன்படுத்தப்படலாம்.
மக்கள் கூடுமிடங்களிலும் இதை பயன்படுத்தலாம். கொவிட் தொற்று குறித்து அச்சப்படுவோர் பொது இடங்களில் கொவிட் தொற்று பரவாதிருப்பதற்காக இதை தினமும் மூன்று வேளை பயன்படுத்தலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆய்வினை மெல்பேர்ன் பல்கலைக்கழகம்இ மொனாஷ் பல்கலைக்கழகம் இமெல்பேர்ன் வடக்கு சுகாதாரத்துறை, பீட்டர் டொஹெர்த்தி நிறுவனம், முடோர்த் சிறுவர் ஆராய்ச்சி நிறுவனம்,கொமன்வெல்த் விஞ்ஞான உற்பத்தி ஆராய்ச்சித்துறை, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் என்பவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இது மூக்கினால் சுவாசிக்கக்கூடியவாறு Inhaler ஆகவும் தயாரிக்கப்படவுள்ளது. இதேவேளை தான் கடந்த இருபது மாதங்களாக இதனை பயன்படுத்தி வருவதாகவும் தனக்கு இதுவரை எதுவித பிரச்சனையும் ஏற்படவில்லையெனவும் காம்பெல் கூறுகிறார்.
இந்த நிலையில் விக்டோரியா அரசாங்கம் வருகிற பெப்ரவரி மாதம் கொவிட் பாதிப்புக்குள்ளான 400 பேருக்கு இந்த மருந்தை பரீட்சித்து ப்பார்க்கும் நோக்குடன் .4.2 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை ஒதுக்கியுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.