400 கிலோ தங்க கொள்ளையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டனர்
கனடாவில் இடம்பெற்ற பாரிய தங்க கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுமார் 24 மில்லியன் டொலர் பெறுமதியான தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் கொள்ளையிடப்பட்டிருந்தன.
கடனாவின் பியர்சன் விமான நிலையத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 17ம் திகதி இவ்வாறு சுமார் 400 கிலோ கிராம் எடையுடைய தங்கம் களவாடப்பட்டுள்ளது.
பீல் பிராந்திய பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இந்த சம்பவம் இடம்பெற்ற போது எயார் கனடா விமான சேவையில் கடமையாற்றிய இருவரும் கொள்ளைக்கு துணை நின்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேருக்கு நாடு தழுவிய அடிப்படையிலான பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட 6600 தங்க பிஸ்கட்கள் மற்றும் 2.5 மில்லியன் டொலர் பெறுமதியான வெளிநாட்டு நாணயம் என்பன இவ்வாறு களவாடப்பட்டுள்ளன.
இந்த கொள்ளையுடன் தொடர்புடைய சிலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.