தங்கக் கொள்ளை குறித்த விசாரணைகள் தொடரும் – நிசான் துரையப்பா
400 கிலோ கிராம் எடையுடைய தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் என்பன கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடரும் என பீல் பிராந்திய பொலிஸ் பிரதானி நிசான் துரையப்பா தெரிவித்துள்ளார்.
இந்த கொள்ளைச் சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
விரிவான விசாரணகைளின் மூலம் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பிலான உண்மைகளை வெளிப்படுத்த நடவடிக்கை எடுத்த விசாரணைகயாளர்களின் பங்களிப்பு பாராட்டுக்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை அடையாளம் காணவும் கைது செய்யவும் உதவியவர்கள் மற்றும் ஏனைய சட்டத்துறை சார்ந்தவர்களை பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த கொள்ளைச் சம்பவம் எயார் கனடா விமான சேவை நிறுவனத்தில் பணியாற்றியவர்களின் உதவியுடன் மேற்கோள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச துப்பாக்கி கடத்தல் கும்பலுக்கும் இந்த கொள்ளைச் சம்பவத்திற்கும் தொடர்பு உண்டு என தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 20 மில்லியன் டொலர் பெறுமதியான தங்கமும் 2.5 மில்லியன் டொலர் பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களும் இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளன.