ஈரான் பதற்றம் மத்தியில் ட்ரம்ப் பேச்சுவார்த்தையில் மாற்றமில்லை
ஈரானியப் போர்ச் சூழலில் அமெரிக்க போர் வானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்டபோதும், "பேச்சுவார்த்தையில் மாற்றமில்லை" என்று ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
NCB ஊடகத்திற்கு வழங்கிய தொலைபேசி நேர்காணலில், அமெரிக்கப் போர் வானூர்தி; வீழ்த்தப்பட்ட சம்பவம் ஈரானுடனான தற்போதைய பேச்சுவார்த்தைகளைப் பாதிக்காது என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ட்ரம்பின் இந்த அறிவிப்பு, போர் தீவிரமடைந்தாலும் இராஜதந்திர ரீதியிலான கதவுகள் இன்னும் முழுமையாக மூடப்படவில்லை என்பதைக் காட்டுகிறது.
தற்போதைய தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மிகவும் நுணுக்கமான இராணுவ விவகாரம் என்பதால், அது குறித்த மேலதிக விபரங்களை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பான ஊடகங்களின் செய்தி வெளியீடுகள் குறித்து அவர் தனது அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தநிலையில், தனது வான் பாதுகாப்பு அமைப்புகள் (Air Defense Systems) மூலம் இந்த விமானங்களை வீழ்த்தியதாக ஈரான் தொடர்ந்து கூறி வருகிறது.
ஆனால், அமெரிக்கத் தரப்பு இதனை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.