இலங்கைக்குள் எந்த வெளிநாட்டு உளவு கப்பலுக்கும் அனுமதி இல்லை! அரசு அதிரடி
இலங்கைக்குள் இந்தியாவின் எதிர்ப்பை மீறி அவ்வப்போது சீன உளவு கப்பல்கள் வருகின்றன. அவை இலங்கை துறைமுகங்களில் நங்கூரமிட்டு, ஆய்வுப்பணியில் ஈடுபடுகின்றன.
இதேவேளை, எதிர்வரும் ஜனவரி மாதம், மற்றொரு சீன ஆய்வுக்கப்பல் இலங்கைக்கு வர திட்டமிட்டுள்ளது. அதற்காக இலங்கை அரசாங்கத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
இந்த நிலையில், எந்த வெளிநாட்டு உளவு கப்பலையும் இலங்கை கடல் எல்லைக்குள் வர அனுமதிப்பது இல்லை என்று இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இந்த நடவடிக்கை வருகிற ஜனவரி மாதம் முதல் ஓராண்டுக்கு அமலில் இருக்குமென அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் இலங்கையில் தங்கள் உளவு கப்பல்களை நிறுத்திய அனைத்து வெளிநாடுகளுக்கும் இம்முடிவை தெரிவித்து விட்டதாக இலங்கை வெளியுறவு மந்திரி அலி சப்ரி தெரிவித்தார்.