மீண்டும் ஏவுகணை சோதனையில் வடகொரியா
அணு ஆயுதங்களை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளை அவ்வப்போது அதிர்ச்சிக்குள்ளாக்கி வரும் நாடு வடகொரியா.
அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தும் இந்த ஏவுகணை சோதனைகளில் வடகொரியா ஈடுபட்டுள்ளது. மேலும், உலக நாடுகளுக்கு தனது ஆயுத பலத்தை வெளிப்படுத்துகிறது.
இதனிடையே, இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து வடகொரியா தனது ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்தியுள்ளது. நீண்ட தூர துல்லியமான தாக்குதல்கள் மற்றும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் உட்பட பல்வேறு ஏவுகணைகளை வடகொரியா சோதித்து வருகிறது. இந்நிலையில், வடகொரியா மீண்டும் ஏவுகணையை சோதனை செய்துள்ளதாக தென்கொரியா இன்று தெரிவித்துள்ளது.
தலைநகர் பியாங்யாங்கிற்கு அருகில் உள்ள சுனான் நகரில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை கொரிய தீபகற்பத்தில் உள்ள கடலில் விழுந்ததாக தென் கொரியா தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் வடகொரியா நடத்தும் 9வது ஏவுகணை சோதனை இதுவாகும்.
வடகொரியாவின் ஏவுகணை சோதனை தென்கொரியாவின் 9வது அதிபர் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.