தொலைபேசியில் ஜெலன்ஸ்கியிடம் சீன ஜனாதிபதி கூறிய முக்கிய தகவல்!
"சீன அதிபர் ஜி ஜின்பிங் ரஷ்யாவுக்கு எந்த ஆயுதங்களையும் விற்பனை செய்யமாட்டோம் என தெரிவத்துள்ளார் என உன்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உடன் தொலைபேசியில் மூலம் பேசியதாகவும், அப்போது இதனை தெரிவித்ததாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மேலும், "அவர் மரியாதைக்குரிய நபரா? இல்லையா? என்று பார்ப்போம். ஏனென்றால், அவர் எனக்கு வார்த்தை கொடுத்துள்ளார்" என்றார்.
இது தொடர்பாக ஜோ பைடன் கூறுகையில் "ரஷியாவிற்கு சீனா ஆயுதங்கள் விற்பனை செய்யவில்லை என்கிறது. ஆனால், ஆயுதங்கள் தயாரிப்பதற்கான திறன் மற்றும் டெக்னாலஜி உள்ளிட்டவைகளை வழங்குகிறது. இவைகள் ரஷியாவிற்கு உதவுகின்றன.
உக்ரைனுக்கும் சீனாவுக்கும் இடையில் அமைதி தொடர்பான ஒரே பார்வை இருந்தால், இரு நாட்டிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடக்கும். சீனாவுக்கு வேறு பார்வை இருந்தால், அமைதிக்கான மாற்று தயார் செய்யும் என ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.