ArriveCAN செயலியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறினால் ஏற்பட்ட குழப்பம்
எரைவ்கன் (ArriveCAN) என்னும் செயலியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறினால் தவறுதலாக சிலரை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது எனவும் இதனால் பயனர்கள் குழப்படைந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கனேடிய எல்லைப் பாதுகாப்பு முகவர் நிறுவனம் இந்த விடயம் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
தமது பயனர்களில் மூன்று வீதமானவர்களுக்கு இவ்வாறு பிழையான தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
எப்பள் கருவிகளைப் பயன்படுத்தி செயலியை தரவிறக்கம் செய்த பயனர்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொழில்நுட்பக் கோளாறு அடையாளம் காணப்பட்டு உடனடியாக தீர்வு வழங்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்திற்குள் பிரவேசிக்கும் அனைத்துப் பயணிகளும் இந்த செயலியை பயன்படுத்த வேண்டியது கட்டாயமானது.
இந்த செயலியைக் கொண்டு பயணிகளின் சகல விபரங்களும் திரட்டப்படுகின்றது. எல்லைப் பாதுகாப்பு முகவர் நிறுவனத்தின் பணிகளை இலகுபடுத்தும் நோக்கில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
பயனர்கள் சிலருக்கு தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு செயலி ஊடாக தகவல் அனுப்பி வைக்கப்பட்ட போதிலும், அந்தந்த பகுதிகளின் சுகாதார அதிகாரிகளே யாரை தனிமைப்படுத்துவது என்பதனை நிர்ணயம் செய்கின்றனர் என எல்லைப் பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.