பிரிட்டன் ராணியாருக்கான துக்கமனுசரிப்பு: கனேடிய மாகாணம் செலவிட்ட தொகை
பிரிட்டன் ராணியாரின் துக்கமனுசரிப்புக்கு என நோவா ஸ்கொடியா மாகாணமானது 8.3 மில்லியன் டொலர் செலவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டன் ராணியார் இரண்டாம் எலிசபெத் கடந்த 8ம் திகதி காலமானார். அவருக்கு செப்டம்பர் 19ம் திகதி இறுதிச்சடங்குகள் முன்னெடுக்கப்பட்டது. இந்த நிலையில் பாடசாலைகள், நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதுடன், அரசு ஊழியர்களுக்கும் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் சுகாதார ஊழியர்களுக்கு விடுப்பு அளிக்கப்படவில்லை, அத்துடன் வணிகங்கள் அனைத்திற்கும் அவர்களின் விருப்பத்திற்கு விடுப்பு அளிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
இதனால், சுகாதார ஊழியர்களுக்கு ஊதியம் அளிக்கும் வகையில் 7.1 மில்லியன் டொலர் செலவானதாகவும்,
நீதித்துறை உள்ளிட்டவைகளுக்கு மேலதிகமாக 1.2 மில்லியன் டொலர் செலவானதாகவும் கூறப்படுகிறது.