நெருங்கும் விடுமுறை நாட்கள்... நோவா ஸ்கோடியாவில் இறுகும் கட்டுப்பாடுகள்
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நெருங்கிவரும் நிலையில் நோவா ஸ்கோடியாவில் கொரோனா விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை நோவா ஸ்கோடியா நிர்வாகம் முன்னெடுத்து வருகிறது.
இந்த நிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நெருங்கி வருவதால், கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள் புதன்கிழமை பகல் 6 மணி முதல் ஜனவரி 12ம் திகதி வரையில் அமுலில் இருக்கும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள் மற்றும் வெளியரங்குகளில் 2 மீற்றர் தனிமனித இடைவெளி அவசியம் என குறிப்பிட்டுள்ளனர். தனிமனித இடைவெளி பின்பற்ற முடியாத பணியிடங்களில் மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர்கள் மட்டும் ஒன்றாக கூட அனுமதி. சிறப்பு நிகழ்ச்சிகள், பண்டிகை கொண்டாட்டங்களை இணையமூடாகவே நடத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.
வணிக வளாகங்கள், அருங்காட்சியகங்கள், சில்லறை வணிகம் உள்ளிட்டவை 50% வாடிக்கையாளர்களுடன் செயல்படலாம் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.