சாலையில் வெடித்த எண்ணெய் டேங்கர்! குழந்தைகள் உட்பட 20 பேர் பலி
நைஜீரியாவின் ஒன்டோ மாகாணத்தின் ஒடிக்போ உள்ளூர் அரசாங்கப் பகுதியான ஓரேயில் எண்ணெய் டேங்கர் ஒன்று வெடித்ததில் மூன்று குழந்தைகள் மற்றும் ஒரு கர்ப்பிணிப் பெண் உட்பட 20 பேர் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டேங்கரிலிருந்து எரிபொருளை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நபர்களில் ஒருவர் வைத்திருந்த போன் தீப்பற்றியதால் இந்த வெடிப்பு சம்பவம் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
லாகோஸ் - பெனின் விரைவுச்சாலையில் ஏற்பட்ட இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தால் ஒரு தடித்த கறுப்புப் புகையுடன் பெரிய அளவிலான தீயை உண்டாக்கியது, இது முழுப் பகுதியையும் சூழ்ந்தது, மீட்புக்குழுவினர் நிலைமையை ஆய்வு செய்ய சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
BREAKING: FIRE EXPLOSION AT ORE, ONDO, STATE! OUR THOUGHTS AND PRAYERS ARE WITH THEM ??? pic.twitter.com/j65zJHwURI
— GTDrumz (@DrumzGt) July 24, 2023
ஓண்டோ மாநில அரசின் அறிவுறுத்தலின் பேரில் பல தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன.
டேங்கர் வெடித்துச் சிதறிய விபத்தால், அப்பகுதியே தீப்பிழம்புடன் காட்சியளித்தது.
குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.