அச்சுறுத்தும் ஒமைக்ரான்; புதிய கட்டுப்பாடுகளை அமுல்படுத்த தயாராகும் பிரபல நாடு!
ஜெர்மனியில் ஒமைக்ரானால் 5ம் அலை வருவதை தடுக்க இயலாது என அந்நாட்டு சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். ஒமைக்ரான் அச்சுறுத்தலினால் ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை ஒட்டி கொரோனா கால கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.
அதன்படி பொதுமக்கள் ஓரிடத்தில் 10 பேருக்கு மேல் கூடக்கூடாது, இரவு நேர கிளப்புகள் செயல்பட அனுமதியில்லை, கால்பந்து மற்றும் இதர விளையாட்டு போட்டிகள் பார்வையாளர்கள் இன்றி நடைபெறலாம் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதோடு பட்டாசுகள் வெடிக்கவும் தடை அங்கு விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள் கிறிஸ்துமஸ் முடிந்த பின் டிசம்பர் 28ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளன. அதேவேளை கிறிஸ்துமஸ் பண்டிகையை மக்கள் பெரும்பாலும் அவரவர் வீடுகளிலேயே கொண்டாடுவதால் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புகள் குறைவு என்றும் சொல்லப்பட்டுள்ளது.
ஜெர்மனி பிரதமர் ஸ்கால்ஸ் மற்றும் 16 மாநில கவர்னர்களுடனான கூட்டத்துக்கு பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஜெர்மனி பிரதமர் ஸ்கால்ஸ் கூறுகையில்
“தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள், தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள், தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள்.கொரோனா வைரஸ் கிறிஸ்துமஸ் விடுமுறை எடுத்துக் கொள்ளப் போவதில்லை” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை ஜெர்மனியில் ஒமைக்ரானால் 5ம் அலை வருவதை தடுக்க இயலாது என்று அந்நாட்டு சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.