ஓமிக்ரோன் அச்சுறுத்தல்: அதிரடி நடவடிக்கை அமல்படுத்திய நாடு!
ஓமிக்ரோன் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஸ்பெயினில் முக கவசம் பயனபடுத்த கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் முதலில் கண்டறிப்பட்ட ஓமிக்ரோன் வைரஸ், உலகின் 106 நாடுகளில் இதுவரை பரவிவுள்ளது. ஐரோப்பிய நாடுகளிலும் Omicron வைரஸ் வேகமாக பரவியும் வருகிறது. இதனால் நோயை கட்டுப்படுத்த உலக நாடுகள் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுள்ளன.
இந்நிலையில் ஸ்பெயினில் வீட்டுக்கு வெளியே வீதிகளுக்கு, தெருக்களுக்கு முக கவசத்துடன் வர வேண்டும் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. கடந்த (2021) ஜூன் மாதம் அங்கு பொது இடங்களில் முக கவசம் அணிவது விலக்கிக்கொள்ளப்பட்டதும், இப்போது மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஆஸ்திரேலியாவில் New South Wales மாகாணத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் அங்கு மூடிய அரங்குகளில் முக கவசம் அணிவது மறுபடியும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேயாவில் ஓமிக்ரோன் பரவலைக் கட்டுப்படுத்த தேசிய அளவில் பொதுமுடக்கத்தை அமல்படுத்தவோ, முக கவசம் அணிவதை கட்டாயம் ஆக்கவோ முடியாது என பிரதமர் ஸ்காட் மோரிசன் (Scott Morrison) அறிவித்துள்ளார்.