ஓமிக்ரோனால் 45 சதவீதம் குறையும் எண்ணிக்கை: பிரித்தானியா ஆய்வில் தகவல்
ஓமிக்ரோன் வைரஸ் பாதிப்பு காரணமாக வைத்தியசாலையில் சேர்க்கப்படுவது 45 சதவீதம் குறைவாக உள்ளதாக பிரித்தானியா ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் புதிய வகை உருமாறிய கொரோனாவான Omciron வைரஸ் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ளது. வேகமாக பரவக்கூடிய இந்த வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
முதன்முதலில் தென்னாப்பிரிக்காவில் தோன்றிய ஓமிக்ரோன் வைரஸ் குறைவான நாட்களிலேயே 106 நாடுகளில் பரவி உள்ளது. குறிப்பாக அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, மற்றும் ஐரோப்பிய நாடுகளில் omicron பாதிப்பு அதிகமாக உள்ளது.
இதேவேளை, மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்ட ஓமிக்ரோன் வைரஸ் முன்பு உருவான டெல்டா வகை கொரோனா வைரஸை விட குறைவான பாதிப்புகளையே ஏற்படுத்துகிறது என்று ஆரம்ப கட்ட ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் உருமாறிய டெல்டா வகை வைரஸை விட ஓமிக்ரோன் வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் வைத்தியசாலைகளில் சேர்க்கப்படுவது 40 முதல் 45 சதவீதம் வரை குறைவாக உள்ளது என்று பிரித்தானியாவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் உள்ள லண்டன் இம்பீரியல் கல்லூரியை சேர்ந்த நிபுணர்கள் நடத்திய ஆய்வில் கூறி இருப்பதாவது,
ஒட்டுமொத்தமாக டெல்டா வகை தொற்றுடன் ஒப்பிடும்போது ஓமிக்ரோன் பாதிப்பால் வைத்திய்சாலைகளில் அனுமதிக்கப்படுவதற்கான ஆபத்து குறைவாக இருப்பதற்கான ஆதாரங்களை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.
டெல்டா வகை வைரஸை விட Omicron தொற்றால் வைத்தியசாலையில் சேர்க்கப்படுவது 40 முதல் 45 சதவீதம் வரை குறைவாக இருக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.