அநுர அரசின் அதிரடி அறிவிப்பு: வீடு இழந்தவர்களுக்கு ஓரு கோடி ரூபா
இலங்கையை அண்மையில் உலுக்கிய திட்வா பேரனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் பல்வேறு நலன்திட்டங்களை அதிரடியாக அறிவித்து வருகின்றது.
அந்த வகையில் மழை வௌ்ளம், மண்சரிவு மற்றும் புயல் சீற்றத்தினால் முற்றாக வீடுகளை இழந்தவர்களுக்கு ஒரு கோடி ரூபா நட்டஈடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்த விடயத்தை இன்றைய தினம் நாடாளுமன்றில் அறிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் இவ்வாறு இயற்கை பேரனர்த்தங்களினால் வீடுகளை இழந்தவர்களுக்கு 12 முதல் 18 லட்சம் ரூபா மட்டுமே வழங்கப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
டிட்வா புயல் சீற்றத்தின் காரணமாக வீடுகளை இழந்தவர்களுக்கு 50 லட்சம் ரூபா நட்ட ஈடாக வழங்கப்படும் என அவர் நாடாளுமன்றில் அறிவித்துள்ளார்.
மண்சரிவு போன்ற காரணிளினால் வீடுகள் அமைக்கப்பட்டிருந்த காணிகளும் அழிவடைந்திருந்தால் மேலும் ஐம்பது லட்சம் ரூபா நட்டஈட்டுத்தொகை வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
காணிகளை இழந்தவர்களுக:கு அரச காணிகள் வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்படுவதாகவும் இது தொடர்பில் அரச அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதகாவும் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வார இறுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரச காணிகளை வழங்குவது குறித்து ஆராயும் நோக்கில் கள விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளதாக ஜனாதிபதி அநுர தெரிவித்துள்ளார்.
அனர்த்த அபாயம் காணப்படும் பிராந்தியங்களில் மக்கள் மீண்டும் குடியமர்த்தப்பட மாட்டார்கள் எனவும் அதற்கான அனுமதியை அரசாங்கம் எந்த வகையிலும் வழங்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வீடுகளை இழந்து அல்லது சேதமடைந்து தற்காலிக முகாம்களில் தங்கியிருப்போர் முகாம்களை விட்டு வெளியேற விரும்பினால் மூன்று மாத காலத்திற்கு மாதமொன்றுக்கு 25000 ரூபா கொடுப்பனவு தொகை வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
பகுதியளவில் சேதமடைந்த வீடுகளை மீளமைப்பதற்கும் கொடுப்பனவு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.