கனடாவின் முக்கிய மாகாணத்தில் ஆறாவது அலை: மருத்துவர்கள் எச்சரிக்கை
கொரோனா பரவல் ஏற்பட்டு நீண்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, ஒன்ராறியோ மருத்துவ வல்லுநர்கள் சிலர், மாகாணம் ஆறாவது அலைக்குள் நுழைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த ஒரு வாரம் அல்லது 2 வாரங்களுக்கு முன் பதிவான கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைவிட தற்போது, பாதிப்பு என்ணிக்கை அதிகரித்துள்லதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனாலையே, இது ஒரு கொரோனா அலையாக இருக்கலாம் எனவும், ஆனால் எத்தனையாவது அலை என்பதை குறிப்பிடவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அடுத்த சில வாரங்களுக்கு ஒன்ராறியோவில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள், மருத்துவமனையை நாடுவது கண்டிப்பாக அதிகரிக்கும் என குறிப்பிட்டுள்ளனர்.
அடுத்த வாரம் அல்லது இன்னும் 2 வாரங்களில் அதற்கான அறிகுறிகள் தென்படும் எனவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஒன்ராறியோவில் செவ்வாய்க்கிழமை மட்டும் 790 பேர்கள் கொரோனாவால் மருத்துவமனையை நாடியுள்ளனர். இதில் 165 பேர்கள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஞாயிறன்று 553 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அந்த எண்ணிக்கை 790 என அதிகரித்துள்ளது.
எச்சரிக்கையாக நாம் இல்லை என்றால், உயிர் காக்கும் அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் மக்களுக்கு நாம் செய்யும் துரோகமாகவே பார்க்கப்படும் என்கிறார் மருத்துவ நிபுணர் ஒருவர்.
அறுவை சிகிச்சைக்காக மக்கள் பல மாதங்களாக காத்திருப்பதாகவும், ஒவ்வொரு முறையும் கொரோனா பரவல் காரணமாக அறுவை சிகிச்சைகள் தள்ளி வைக்கப்பட்டு வருகிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.