லொத்தர் சீட்டில் பரிசு வென்ற தந்தை மகளுக்கு வழங்கும் இன்ப அதிர்ச்சி
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் லொத்தர் சீட்டிலுப்பில் பரிசு வென்ற நபர் ஒருவர் தனது மகளுக்கு இன்ப அதிர்ச்சி வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
லொட்டோ லொத்தர் சீட்டிலுப்பில் ஹமில்டனைச் சேர்ந்த போல் பர்கசன் என்ற நபர் ஒரு மில்லியன் டொலர்களை வென்றுள்ளார்.
இந்த பரிசுத் தொகையை பயன்படுத்தி தனது மகளுக்கு வீடு ஒன்றை கொள்வனவு செய்ய உள்ளதாக பர்கசன் தெரிவிக்கின்றார்.
லொத்தர் சீட்டிலுப்பில் பரிசு வென்றதன் காரணமாக பெரும் மகிழ்ச்சி அடைந்ததாகவும் அன்றிரவு நித்திரை கொள்ளவில்லை எனவும் 74 வயதான பெர்கசன் குறிப்பிடுகின்றார்.
புதிய சக்கர நாற்காலி ஒன்றையும், தனது ஒரே மகளுக்கு வீடு ஒன்றையும் கொள்வனவு செய்யவே இந்த பரிசுத் தொகையை பயன்படுத்த உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தானும் தனது மனைவியும் எளிமையான வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ விரும்புபவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.