ஒன்ராறியோவில் தீவிரமாக பரவும் ஓமிக்ரோன் வைரஸ்!
ஒன்ராறியோ மாகாணத்தில் கூடுதல் எண்ணிக்கையிலானவர்கள் ஓமிக்ரோன் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஒன்ராறியோவில் நேற்றைய தினம் (21-12-2021) 3400 கொரோனா தொறாளர்கள் பதிவாகியதுடன் 10 மரணங்களும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Omicron வைரஸ் பரவலால் நோய்த் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், வைத்தியசாலை அனுமதிகளும் அதிகரித்துள்ளன. கடந்த சில வாரங்களாகவே தொற்று உறுதியாளர்கள் அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒன்ராறியோவில் கடந்த வாரத்தில் பிரதான திரிபாக ஓமிக்ரோன் பதிவாகியது என மாகாண பிரதம மருத்துவ அதிகாரி கெய்ரன் மூர் தெரிவித்துள்ளார்.
2 நாட்களில் இந்த திரிபினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரட்டிப்பாக உயர்வடைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.