தேர்தலில் மீண்டும் அமோக வெற்றி பெற்ற விஜய் தணிகாசலம்!
ஒன்றாரியோ மாகாண தேர்தலில் Scarborough Rouge Park தொகுதியில் முற்போக்கு பழமைவாத கட்சி சார்பில் போட்டியிட்ட திரு. விஜய் தணிகாசலம் இரண்டாவது தடவையாகவும் பெருமளவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்துள்ளார்.
இன்றைய தினம் (06.02.2022) வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தலில் திரு. விஜய் தணிகாசலம் 6120 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்துள்ளார்.
ஒன்றாரியோ முற்போக்கு பழமைவாத கட்சி சார்பில் போட்டியிட்ட விஜய் தணிகாசலம் 15,732 வாக்குகளினையும் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட மானால் அப்துலாகி 9,522 வாக்குகளினையும் புதிய ஜனநாயகக் கட்சி (NDP) கட்சி சார்பில் போட்டியிட்டசாமுயேல் பெலிசியா 7,576 பெற்றுக்கொண்டனர்.
ஸ்கார்பரோ ரூஜ் பூங்கா Scarborough Rouge Park தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் திரு. கரி ஆனந்தசங்கரி அவர்கள் விஜய் தணிகாசலத்தினை எதிர்த்து போட்டியிட்ட தமிழர் அல்லாத லிபெரல் வேட்பாளரான மானால் அப்துலாகிக்கு தனது ஆதரவினை நேரடியாக வழங்கி இருந்ததினால் போட்டி பலமாக இருக்கலாம் என பலரும் எதிர்பார்த்த நிலையில் விஜய் தணிகாசலத்தின் வெற்றி எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் லிபரல் கட்சியின் வெற்றியினையும் கேள்வி குறியாகியுள்ளதும் குறிப்பிட தக்கது.
இன்றைய வெற்றி விழாவில் உரையாற்றிய விஜய் அனைத்து வாக்காளர்களுக்கும் , ஆதரவாளர்களுக்கும், கட்சி உறுப்பினர்களுக்கும் தனது நன்றியினை தெரிவித்தார்.