20 நிமிட டாக்ஸி பயணத்திற்காக 7000 டொலர் செலுத்திய கனடிய பெண்
கனடிய பெண் ஒருவர் 20 நிமிட டாக்ஸி பயணத்திற்காக ஏழாயிரம் டொலர் கட்டணத்தை செலுத்த நேரிட்டுள்ளது.
சட்டவிரோதமான டாக்ஸி நிறுவனமொன்றின் சேவையை பெற்றுக்கொண்டதனால் இந்த நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது.
அன்டார்டிக்காவிற்கான பயணத்தை மேற்கொண்ட போது இவ்வாறு குறித்த பெண் ஏமாற்றப்பட்டுள்ளார்.
பெட் செக்லெடி என்ற பெண்ணே இவ்வாறு மோசடி நிறுவனமொன்றிடம் சிக்கியுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் சன்டியாகோ விமான நிலையத்தில் டாக்ஸி ஒன்றை பெட் செக்லெடி மற்றும் அவரது நண்பி ஆகியோர் புக் செய்துள்ளனர்.
புக் செய்யப்பட்ட வண்டி விபத்துக்கு உள்ளான காரணத்தினால் வேறு ஒரு நிறுவனத்திடம் இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிறுவனம் கட்டணத்தை அட்டையில் மட்டுமே பெற்றுக்கொள்ளும் என அறிவித்துள்ளது.
இதன்படி வண்டியில் ஏறி பயணம் செய்தவர்களிடம் சுமார் 62 டொலர்கள் கட்டணம் என கூறப்பட்டுள்ளது.
எனினும் நாடு திரும்பிய பின்னர் கிடைக்கப் பெற்ற வங்கிக் கூற்றில் டாக்ஸி பயணத்திற்காக 6943 டொலர்கள் அறவீடு செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
வங்கியிடம் இந்த மோசடி குறித்து அறிவித்த போது ஆரம்பத்தில் பணத்தை செலுத்த வேண்டுமென கூறப்பட்டுள்ளது.
எனினும் பின்னர் இந்த தொகையை செலுத்த தேவையில்லை என வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனால் தாம் மகிழ்ச்சி அடைவதாக அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
இதேவெளை, சில்லி நாட்டில் டாக்ஸி மோசடிகள் இடம்பெறுவதாக கனடிய அரசாங்கம் அதிகாரபூர்வ எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.