86000 டொலர்களை இழந்த கனேடிய பெண் விடுக்கும் அறிவுறுத்தல்!
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் 86000 டொலர்களை இழந்துள்ளார்.
கனடிய வருமான முகவர் நிறுவனத்தின் விசாரணையாளர் என்ற போர்வையில் சிலர், இந்தப் பெண்ணை ஏமாற்றி பணம் பறித்துள்ளனர்.
குறித்த பெண்ணின் வங்கிக் கணக்கு ஊடாக நிதிச் சலவை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அஞ்சிரா என்ற பெண்ணே சம்பவத்தில் பெருந்தொகை பணத்தை இழந்துள்ளார்.
நிதிச் சலவை நடவடிக்கைகளுக்கு வங்கிக் கணக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கோரப்பட்டுள்ளது.
வங்கியில் வைப்புச் செய்யப்பட்டுள்ள பணத்தை மீளப்பெற்று பிட்கொயின் இயந்திரத்தின் ஊடாக வைப்புச் செய்யுமாறு தொலைபேசி வழியாக மோசடிகாரர்கள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
அரசாங்கத்தின் விசாரணைகளுக்கு உதவுவதாக நினைத்த பெண், அவர்களின் அறிவுறுத்தல்களை பின்பற்றியுள்ளார்.
இதனால் குறித்த பெண் 86000 டொலர்ளை இழக்க நேரிட்டுள்ளது.
இதேவேளை கனடிய வருமான முகவர் நிறுவனம் அல்லது வேறும் அரசாங்க நிறுவனங்களின் பெயர்களில் அழைப்புக்கள் எடுக்கப்பட்டால் அதன் உண்மைத் தன்மை குறித்து ஆராய்ந்து அதன் பின்னர் நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.