ஒன்றாரியோ துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு
ஓன்றாரியோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
ஒன்றாரியோவின் ரென்பிரிவ் பகுதியில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
படுகாயமடைந்த நிலையில் இருந்த ஒருவரை பொலிஸார் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பற்றிய விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினை தொடர்ந்து பொலிஸார் அந்தப் பகுதியில் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
எனினும் இந்த சம்பவத்தினால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் கிடையாது என பின்னர் பொலிஸார் அறிவித்துள்ளனர்.