பாகிஸ்தான் மசூதி குண்டு வெடிப்பு: 62 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை
பாகிஸ்தானின் வடமேற்கு எல்லையில் உள்ள பெஷாவர் நகரில் ஒரு மசூதி உள்ளது. அங்கு வெள்ளிக்கிழமை பிரார்த்தனை நடைபெற்றது. அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் மசூதிக்குள் நுழைய முயன்றனர்.
பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். ஒரு பொலிஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார். மற்றொருவர் பலத்த காயம் அடைந்தார். இதைத் தொடர்ந்து பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது.
இதில் 45 பேர் உயிரிழந்ததாகவும், 65 பேர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த குண்டுவெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 62 ஆக உயர்ந்துள்ளது.காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று மசூதியில் நடந்த குண்டுவெடிப்புக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
கொராசன் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தீவிரவாத தாக்குதலுக்கு ஐ.நா. கடும் கண்டனத்திற்கு மத்தியில், குண்டுவெடிப்புக்கு காரணமானவர்களை கைது செய்வதாக பாகிஸ்தான் அரசு உறுதியளித்துள்ளது.