ரஷியா மற்றும் பெலாரஸ் நாடுகளுக்கு பாரா ஒலிம்பிக்ஸ் அதிரடி அறிவிப்பு
குளிர்கால பாரா ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் ரஷியா மற்றும் பெலாரஸ் தடகள வீரர்கள் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 8-வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், ரஷியப் படைகள் வேகமாக முன்னேறி உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றி வருகின்றன.
இதன்படி ரஷியாவுக்கு உதவியாக பெலாரஸ் படைகளும் தாக்குதலில் ஈடுபட்டு வரும் நிலையில், தாக்கதலை நிறுத்த வேண்டும் என பல நாடுகள் கேட்டுக்கொண்டாலும் புடின் உறுதியாக போரை நடத்துவதால் ஐநா உள்ளிட்ட பல அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், இந்தாண்டு குளிர்கால பாரா ஒலிம்பிக் போட்டிகளில் ரஷியா மற்றும் பெலாரஸைச் சேர்ந்த தடகள வீரர்கள் பங்கேற்கத் தடை விதிக்கப்படுவதாக சர்வதேச பாரா ஒலிம்பிக்ஸ் குழு தெரிவித்துள்ளது.