கனடாவில் பயணம் செய்த வாகனத்தின் சாரதியை துப்பாக்கியால் சுட்ட நபர்
கனடாவின் டொராண்டோவில் பயணம் செய்த வாகனத்தின் சாரதி மீது பயணியொருவர் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளார்.
டவுன்ஸ்வியூ பூங்கா அருகே, ஒரு வாகனத்தில் பயணித்த பயணி, வாகன ஓட்டுநரை துப்பாக்கியால் சுட்டதாகவும், பின்னர் மற்றொரு வாகனத்துடன் மோதியதாகவும் தெரிவிக்ப்படுகின்றது.
ஸ்டான்லி கிரீன் மற்றும் டவுன்ஸ்வியூ பூங்கா பவுல்வர்ட்ஸ் பகுதியில் விபத்து இடம்பெற்றுள்ளது. ஒரு வாகனத்தில் இருவர் பயணித்துக் கொண்டிருந்தபோது,
அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது துப்பாக்கிச் சூட்டில் முடிந்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு, அவர்கள் எதிர் திசையில் வந்த மற்றொரு வாகனத்துடன் மோதியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சுடப்பட்ட ஓட்டுநர், உயிருக்கு ஆபத்து இல்லாத காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். விசாரணையின் போது, தோட்டா ஏற்றப்பட்ட துப்பாக்கி ஒன்றை மீட்டுள்ளனர்.
சந்தேகநபராக 24 வயது ஃபைசல் ஜிப்ரில் அடையாளம் காணப்பட்டு, கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சந்தேக நபருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.