இந்தியக் குடும்பத்தை கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் கடத்த உதவிய நபர் கனடாவில்தான் இருக்கிறார்...
கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் கடுங்குளிரில், உறைபனியில், நடந்தே நுழைய முயன்று, ஒரு குடும்பமே பனியில் உறைந்து இறந்துகிடந்த சம்பவம் மூன்று நாடுகளை அதிரவைத்த விடயம் நினைவிருக்கலாம்.
இந்நிலையில், அந்தக் குடும்பத்தை அமெரிக்காவுக்குள் கடத்த உதவிய நபர் கனடாவில்தான் இருக்கிறார் என்னும் அதிரவைக்கும் செய்தி தற்போது வெளியாகியுள்ளது...
2022ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 19ஆம் திகதி, இந்தியாவின் குஜராத்திலுள்ள Dingucha என்ற கிராமத்தைச் சேர்ந்த, ஜகதீஷ் பட்டேல் (39), அவரது மனைவி வைஷாலி (37) மகள் விஹாங்கி (13) மற்றும் மகன் தார்மிக் (3) ஆகியோர் அடங்கிய குடும்பம், அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியின்போது, கனடா அமெரிக்க எல்லையில் பனியில் உறைந்து பரிதாபமாக பலியானது.
Vaishali Patel/Facebook
அந்தக் குடும்பத்தை கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் கடத்த உதவிய இருவரில் ஒருவர், Fenil Patel என்பவர் ஆவார். அந்த சம்பவம் தொடர்பில் இந்த நபர் மீது இந்தியாவில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
Fenil Patel, அமெரிக்கா, அல்லது கனடாவில் ரொரன்றோ, Ottawa மற்றும் வான்கூவர் முதலான இடங்களில் ஏதாவது ஒன்றில் இருக்கலாம் அல்லது தப்பியோடியிருக்கலாம் என இந்திய ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
இந்நிலையில், Fenil Patel ரொரன்றோ புறநகர்ப்பகுதியில் சுதந்திரமாக வாழ்ந்துவருவது தெரியவந்துள்ளது. தன் பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வது, குடும்பத்துடன் வெளியே செல்வது என சாதாரணமான வாழ்ந்துவருகிறார் அவர்.
அவரைக் கைது செய்ய கனடாவை இந்தியா கோரியுள்ளதாக, இந்திய பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அவர் கைது செய்யப்படும் பட்சத்தில், அவரை இந்தியாவுக்குக் கொண்டுவந்து விசாரிக்க வழிவகை ஏற்படும் என்கிறார் குஜராத் மாநில இணை ஆணையரான Chaitanya Mandlik.
CBC
ஆனால், கனடாவில் குற்றவாளி ஒருவரைக் கைது செய்து, அவரை இந்தியாவுக்குக் கொண்டு வர, நடைமுறையில் பல ஆண்டுகள் ஆகலாம் என்கிறார் புலம்பெயர்தல் சட்டத்தரணியான Deepak Ahulwalia என்பவர்.