கனடாவில் போதைப் பொருள் பாவனையாளர்களுக்காக இப்படி ஒர் இடமா!
கனடாவில் போதைப் பொருள் பாவனையாளர்கள் அவற்றை பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கு ஓர் தனியிடம் உருவாக்கப்படவுள்ளது.
கனடாவின் பீல் பிராந்தியத்தில் இந்த போதைப்பொருள் நுகரும் விசேட மையம் உருவாக்கப்பட உள்ளது.
தங்களுக்கு விருப்பான போதைப் பொருளை பாதுபாப்பான முறையில் இந்த இடத்தில் நுகர முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த திட்டத்திற்காக பீல் பிராந்திய நிர்வாகம் 5.8 மில்லியன் டொலர்களை முதலீடு செய்ய உள்ளது. எதிர்வரும் ஆண்டு ஆரம்பத்தில் இந்த பாதுகாப்பான போதைப் பொருள் நுகரும் மையம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பெருந்தொற்று காரணமாக இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
போதைப் பொருள் பயன்பாட்டினால் பல குடும்பங்கள் சீரழிந்து விட்டதாகவும், இதற்கான ஓர் தீர்வாக அளவாகவும் பாதுகாப்பாகவும் போதைப் பொருள் நுகர்வினை மேற்கொள்ளக் கூடிய வகையில் இந்த நிலையம் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கனடாவில் மித மிஞ்சிய அளவில் போதைப் பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.