கனடாவில் மூன்று மாதக் குழந்தையை கொன்றதாக தாய் மீது குற்றச்சாட்டு
கனடாவில் மூன்று மாதக் குழந்தையை கொன்றதாக அந்தக் குழந்தையின் தாய் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சார்லடோவுனை சேர்ந்த 39 வயதான காசி ஏகார்ன் என்பவர், தன் மூன்று மாத குழந்தையின் மரணத்துடன் தொடர்புடையதாக கொலை குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
மார்ச் 20 ஆம் திகதி ஹாலிஃபாக்ஸில் உள்ள IWK மருத்துவமனையில் குழந்தை உயிரிழந்ததை தொடர்ந்து, காசி ஏகார்ன் மீது கொலை குற்றம் பதிவு செய்யப்பட்டதாக சார்லடோவுன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மார்ச் 16 ஆம் திகதி, சார்லடோவுனில் குழந்தை பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் குழந்தை, ஹாலிஃபாக்ஸில் உள்ள IWK மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர், மார்ச் 20ஆம் திகதி குழந்தை உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.