போதைப் பொருள் பயன்படுத்தும் விசேட நிலையங்கள் மூடப்படும்
போதைப்பொருள் பயன்படுத்துவதற்கான விசேட நிலையங்கள் மூடப்படும் என கனடிய எதிர்க்கட்சித் தலைவர் பியே பொலியேவ் தெரிவித்துள்ளார்.
கண்காணிப்புடன் கூடிய இந்த நிலையங்கள் அவசியமற்றது என குறிப்பிட்டுள்ளார்.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் முதல்வர் இந்த போதைப் பொருள் பயன்பாட்டு நிலையத்தின் அவசியம் குறித்து அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.
எனினும் கொன்சவேடிவ் கட்சியின் அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் இவ்வாறான நிலையங்களுக்கு வழங்கப்படும் நிதி இடைநிறுத்தப்படும் என பொலியேவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விளையாட்டு மைதானங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு அருகாமையில் இவ்வாறான நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தால் அவை உடனடியாக மூடப்படும் என தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் பயன்பாட்டுக்கு அடிமையானவர்கள் பாதுகாப்பான வகையில் போதைப்பொருளை பயன்படுத்தக் கூடிய வகையில் இந்த நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
இந்த நிலையங்கள் போதைப்பொருள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் என பொலியேவ் தெரிவித்துள்ளார்.
இதற்காக மக்களின் வரிப்பணத்தை செலவிடுவது பொருத்தமானதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.