25 ஆண்டுகள் மத போதகராக கடமையாற்றியவர் பாலியல் குற்றச்சாட்டில் கைது
கடந்த 25 ஆண்டுகளாக மத போதகராக கடமையாற்றிய நபர் ஒருவரை ஹமில்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
றொரன்டோ பெரும்பாக பகுதியில் கடந்த 1996ம் ஆண்டு முதல் குறித்த நபர் தேவாலயங்களில் மத போதகராக கடமையாற்றி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் 57 வயதான மத போதகரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஹோக்வில்லில் அமைந்துள்ள தேவாலயமொன்றில் குறித்த மத போதகர் கடமையாற்றி வருவதாகவும் பாலியல் குற்றச் செயலில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், குறித்த மத போதகர் மேலும் பல்வேறு பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என்ற அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
புருக்ஸி கேவி என்ற மத போதகருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் 27ம் திகதி நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
இந்த மத போதகர் பற்றிய தகவல்களை பொலிஸாருக்கு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.