பிரித்தானியாவில் வீதிகளில் வேவு பார்க்கும் கமராவை பொருத்தும் பொலிசார்
பிரித்தானியாவில் குற்றங்களைத் தடுக்கும் நோக்கில், காவல்துறையின் முக அங்கீகார தொழில்நுட்பத்தின் (Facial Recognition Technology – FRT) பயன்பாட்டைப் பரவலாக்க அரசாங்கம் முனைப்புக் காட்டி வருகிறது.
இத்திட்டத்தின்படி, இந்த கேமராக்களை நாட்டின் நகரங்கள், சிறு நகரங்கள் மற்றும் கிராமங்கள் வரையிலும் விரிவுபடுத்தப்பட உள்ளன.

பயன்பாடு குறித்த புதிய சட்டங்கள்
இந்தத் தொழில்நுட்பத்தின் பரந்த விரிவாக்கத்திற்கு வழி வகுக்கும் வகையில், அதன் பயன்பாடு குறித்த புதிய சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை அமைச்சர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
ஒவ்வொரு காவல் படைப் பகுதியிலும் (police force area) முக அங்கீகார கேமராக்களை நிறுவுவதே இதன் முக்கிய இலக்கு.
இது தொடர்பில் மக்களின் தனியுரிமையை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்பதற்காக ஒரு பத்து வார கால ஆலோசனை (consultation) செயல்முறையை அரசாங்கம் தொடங்கியுள்ளது.
மேலும், காவல்துறையின் முக அங்கீகாரம், பயோமெட்ரிக்ஸ் மற்றும் பிற கருவிகளின் பயன்பாட்டை மேற்பார்வையிட ஒரு புதிய ஒழுங்குமுறை அமைப்பை (regulator) உருவாக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
அதேவேளை இந்த அமைப்புக்கு என்னென்ன அதிகாரங்கள் இருக்க வேண்டும் என்பது குறித்தும் தற்போது கருத்துக்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன