கனடா நோக்கி புறப்பட்டுள்ள பாப்பாண்டவர்
புனித பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிஸ் கனடாவிற்கான விஜயத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆறு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு பாப்பாண்டவர் வத்திக்கானிலிருந்து புறப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
கனேடிய பழங்குடியினத்தவர்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் பாப்பாண்டவர் இவ்வாறு விஜயம் செய்கின்றார்.
இந்த விஜயம் மிகவும் அவதானத்துடன் மேற்கொள்ளப்பட வேண்டியது என அவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
பழங்குடியின சிறார்கள் கற்ற விதிவிடப்பாடசாலைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அவர் இவ்வாறு விஜயம் செய்ய உள்ளார்.
வதிவிடப் பாடசாலைகளில் 60 வீதமானவை ரோமன் கத்தோலிக்க சபைகளினால் நிர்வாகம் செய்யப்பட்டது.
வதிவிடப் பாடசாலை மாணவ மாணவியர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும், துஸ்பிரயோகம் செய்யப்பட்டதாகவும் பல்வேறு வழிகளில் துன்புறுத்தப்பட்டதாகவும், இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பாப்பாண்டவரின் இந்த விஜயம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.