கனடாவில் 70,000 க்கும் மேற்பட்ட மக்கள் மின்சாரம் இல்லாமல் பாதிப்பு
கனடாவின் நோவா ஸ்கோடியா மாகாணத்தில் கன மழை தொடரும் நிலையில் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 40 ஆண்டுகளில் இப்படியொரு மழை கனேடிய மாகாணங்களில் பெய்தது இல்லை என கூறப்படுகிறது.
மழை காரணமாக இரு சிறார்கள் உட்பட நால்வர் மாயமாகியுள்ள நிலையில் அவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
"Look at it go,it's gonna hit that car!"
— AccuWeather (@accuweather) July 22, 2023
The patio of a local diner in Bedford, Nova Scotia, was swept away by heavy rain and flash flooding today. pic.twitter.com/UT8CC5H9Fg
அத்தோடு ஆபத்தான சூழல் நீடிப்பதால் மாயமானவர்களை தேடும் பணியில் பொதுமக்கள் எவரும் கலந்துகொள்ள வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மழை பாதிப்பால் 70,000 க்கும் மேற்பட்ட மக்கள் மின்சாரம் இல்லாமல் இருந்தனர் என கூறப்பட்டுள்ளது.
Flooding in Bedford, Nova Scotia.#NSStorm pic.twitter.com/mdX1TNH0AC
— Matthew (@NSPerspective) July 22, 2023