சீனாவில் சக்திவாய்ந்த நில அதிர்வு ; இருவர் உயிரிழப்பு
சீனாவில் குவாங்சி மாகாணத்தில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நில அதிர்வில் இருவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
5.2 மெக்னிடியூட் அளவில் பதிவான இந்த நில அதிர்வையடுத்து, 7,000க்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

நில அதிர்வின் தாக்கத்தால் 13 கட்டடங்கள் முற்றாக இடிந்து வீழ்ந்துள்ளதாக சீன தேசிய தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, தொடருந்து பாதைகள் மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்புகளின் பாதுகாப்பு மற்றும் உறுதித்தன்மை தொடர்பாக அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நில அதிர்வின் தாக்கத்தால் சில பகுதிகளில் போக்குவரத்து சேவைகளுக்கு இடையூறு ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.