அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ள உக்ரைன் அதிபர்
உக்ரன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை முடிவுக்கும் வராமல் ஒருமாதம் கடந்த நிலையிலும் போர் இடம்பெற்று வருகின்றது. இதன் காரணமாக உக்ரைன் சின்னாபின்னமாகியுள்ளதுடன், அங்குள்ள மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர்.
பல்வேரு நாடுகளும் போரை நிறுத்துமாறு ரஷ்யாவிடம் வலியுறுத்தி வருகின்றபோதும் ரஷ்யா அதை காதில் வாங்கிக்கொள்ளவில்லை.
இந்நிலையில் உக்ரேன் ஜானதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) நாளை அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் காணொளி காட்சி வாயிலாக உரையாற்ற உள்ளார்.
இத்தகவலை , அவுஸ்திரேலிய வேலைவாய்ப்பு துறை அமைச்சர் தெரிவித்துள்ளதுடன், “போருக்கான எந்தவித காரணமும் இல்லாமல் உக்ரேன் மீது படையெடுப்பை தொடங்கிய ரஷ்யாவுக்கு எதிராக அசாத்திய தைரியத்தையும் உறுதியையும் உக்ரேன் வெளிப்படுத்துகிறதாகவும் அவர் கூறினார் .
அதேவேளை போர் தொடங்கியதில் இருந்து ஐ.நா, அமெரிக்க நாடாளுமன்றம் முதல் ஜப்பான் நாடாளுமன்றம் வரையில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசியல் தலைவர்களின் கூட்டங்களில் உக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) தொடர்ந்து உரையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.